2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

திருட்டுக் குற்றச்சாட்டு: அபராதமும் சிறைத்தண்டனையும்

Princiya Dixci   / 2016 மார்ச் 08 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.டி.எம் ஹனபி

எட்டு வீடுகளை உடைத்து பொருட்கள் திருடியதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட நபரொருவருக்கு, 36,000 ரூபாய் அபராதமும் 48 மாத கால கடூழிய சிறைத்தண்டனையும் விதித்து மஹர பிரதார நீதவான் மஹிந்த பிரபாத் ரணசிங்க, நேற்று திங்கட்கிழமை (07) உத்தரவிட்டார். 

சந்தேகநபருக்கு எதிராக வீடுகள் உடைப்பு, சொத்துக்கள் திருட்டு மற்றும் திருட்டுப் பொருட்களை தம்வசம் வைத்திருந்தமை ஆகிய குற்றஞ்சாட்டுக்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

ஒரு குற்றஞ்சாட்டுக்கு ரூபாய் 1,500 ரூபாய் வீதம் 36,000 ரூபாய் அபராதமும் ஒரு வீடுடைப்புக்கு ஆறு மாத கால சிறைத்தண்டனை வீதம் எட்டு வீடுடைப்புக்கும் 48 மாத கால சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .