2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

தேசிய விவசாய சபை அமைக்க நடவடிக்கை

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 07 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

வருடாந்த வரவு - செலவுத்திட்டத்தை தயாரிக்கும்போதும் விவசாயத்துறையுடன் தொடர்புடைய தீர்மானங்களை மேற்கொள்கின்றபோதும் விவசாய சமூகத்தின் கருத்துக்கள், முன்மொழிவுகளைப் பெற்று அவர்களின் நேரடிப்பங்களிப்பைப் பெற்றுக்கொள்ளும் வகையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் ஒரு முன்மொழிவுக்கேற்ப புதிய தேசிய விவசாய சபையை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 

எல்லா மாவட்டங்களினதும் விவசாய அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அச்சபையை அமைக்கவுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, திறைசேரி, விவசாய, நீர்ப்பாசன, மகாவலி அபிவிருத்தி அமைச்சுகளின் அதிகாரிகளினதும் பங்குபற்றுகையுடன் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கூடும் அச்சபையில் நெல் கொள்வனவு, உரமானியம், உபகரணங்கள் கொள்வனவு மற்றும் சந்தைப்படுத்தல் போன்ற எல்லா விடயங்கள் குறித்தும் எடுக்கப்படும் தீர்மானங்களை வேறு எவரும் மாற்ற முடியாது என்பதோடு, அத்தீர்மானங்கள் கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய விடயங்களாக சட்டமாக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். 

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று புதன்கிழமை (06) முற்பகல் நடைபெற்ற தேசிய விவசாய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 

நீர்ப்பாசன, நீர் வழங்கல் முகாமைத்துவ அமைச்சினால் இந்த மாநாடு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .