2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

டெங்கு: நீர்கொழும்பில் பெண் உயிரிழப்பு

Princiya Dixci   / 2017 மே 17 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட்.ஷாஜஹான்

டெங்குக்  காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு, நீர்கொழும்பில் திம்பிரிகஸ்கட்டுவ வீதி, தளுபத்தை பிரதேசத்தைச் சேர்ந்த பியுமா பெர்னாந்து (59 வயது) என்ற பெண் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண், கடந்த  10ஆம் திகதி சுகயீனமடைந்துள்ளார்.

தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்ற நிலையில், கடந்த 14ஆம் திகதி, நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளளார்.

இந்நிலையில்  சிகிச்சைப் பலனின்றி, 15 ஆம் திகதி திங்கட்கிழமை  இரவு 7.30 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

இந்த வருடம் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்ற நான்காவது டெங்கு மரணம் இதுவாகுமென, நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர் நிலந்தி பத்திரண தெரிவித்தார்.

காய்ச்சலினால் பாதிக்கப்படுபவர்கள் உடனடியாக அரசாங்க வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறுவதற்காக வரவேண்டும் எனவும் டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் காலம் கடந்த நிலையில்  சிகிச்சைப் பெறுவதற்காக வருவது அவர்களின் உயிர்களுக்கு ஆபத்தாக அமையும் எனவும் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர் நிலந்தி பத்திரண  மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .