2024 நவம்பர் 25, திங்கட்கிழமை

ஜெனரேட்டருடன் வந்ததால் பரபரப்பு

Editorial   / 2022 மார்ச் 31 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கேன்களில் எரிபொருள் நிரப்புவதில்லை என்பதால், கடவத்தையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு   வர்த்தகர் ஒருவர் மின்பிறப்பாக்கியை (ஜெனரேட்டர்) தள்ளிக்கொண்டு வந்துள்ளார்.

கேன்களில் எரிபொருள் வழங்கப்படுவதில்லை பல மணி நேரம் மின்சாரமும் துண்டிக்கப்படுகின்றது. இதனால், தான் வளர்க்கும் மீன்கள் உயிரிழந்துவிடும். ஆகையால்தான், மின்பிறப்பாக்கியை தள்ளிக்கொண்டு வந்​தேன் என தெரிவித்துள்ளார்.

இவர், மீன் வளர்க்கும் வர்த்தக நிலையத்தை கொண்டு நடத்தும் வர்த்தகர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேருவளை உள்ளிட்டப் பல கிராமப் பகுதிகளில் அலங்கார மீன் வளர்க்கும் தொழில் ஈடுபடுவோர் மின்தடையால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். சில வர்த்தகர்கள் தாங்கள் வளர்க்கும் மீன்களை வீட்டுக் கிணறுகளில் போட்டுவிட்டுள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .