Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Kogilavani / 2016 ஓகஸ்ட் 12 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
'ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் பிராத்திக்கும்போதே நிரந்தரமான சமாதானத்தை இலங்கையில் கட்டியெழுப்ப முடியும். நிரந்தர சமாதானமென்பது ஒவ்வொரு பிரஜைகளின் மனதிலும் கட்டியெழுப்பப்டும் அமைதியிலே உள்ளது' என இந்தியாவிலிருந்து இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சிவ கிருபானந்த் சுவாமிகள் தெரிவித்தார்.
'மன அமைதிக்கான பயணம்' என்ற தொனிப்பொருளில், சமர்ப்பன் தியான நிகழ்வு, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (14), கொழும்பு பௌத்த கலாசார நிலையத்தில் மாலை 4 மணி முதல் 6.30 மணி வரை நடைபெறவுள்ளது.
இதன் தொடர் நிகழ்வு, யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை நடைபெறவுள்ளதுடன் 20ஆம் திகதி, கண்டி றோயல் கண்டியன் ஹோட்டலில் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை நடைபெறவுள்ளது.
சமயம் சாரா நிகழ்வாக நடத்தப்படவுள்ள இந்நிகழ்வில், இந்தியாவின் புகழ்பெற்றஎச்.எச்.சிவகிருபாணந்த சுவாமி கலந்துகொண்டு, ஆசி வழங்கவுள்ளார். இது தொடர்பிலான ஊடகவியலாளர் மாநாடு கொழும்பு, உலக வர்த்தக மையத்தில், இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்துரைத்த அவர், 'மன அமைதிக்கான பயணம் என்பது, தன் ஆன்மாவை அப்பயணத்துடன் இணைத்துக்கொள்ள விழைபவர்களின் விருப்பமாகும். எம் வாழ்நாளில், நாம் ஏனையேரை பற்றி அறிந்து கொள்ளவும் விளங்கிக் கொள்வதற்குமே முயலுகின்றோமேயன்றி எம்மை நாமே உணர்வதற்கு நாம் முயற்சிப்பதில்லை' என்றார்.
சமர்ப்பன் தியானமானது இமய மலையிலிருந்து வந்த 800 வருடங்கள் பழமை வாய்ந்த ஓர் எளிய வழி முறையாகும். இது உள்ளார்ந்த ஆன்மீக அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது. இதன்மூலம், சாதாரண மனிதன் ஆரோக்கியமான உடல்நிலை, மனஅமைதி, பொருட்கள் சார் உலோகாயுத இன்பம் அல்லது திருப்தியை பெற்றுக்கொள்வது மட்டுமல்லாது, இறுதியில் விடுதலைக்கான குறிக்கோளை எய்த முடியும்' என்றார்.
தியானம் என்பது இனம், மதம், மொழி, நாடு, நிறம் போன்ற அனைத்தையும் கடந்ததொரு தத்துவமாகும். இதன் ஸ்தாபகரான அருட்திரு சிவகிருபானந்த் சுவாமிகள், 40 ஆண்டுகளாக இமயமலையில் பல்வேறு முனிவர்கள், தவசிகள், கைவல்ய குடும்ப யோகிகள் மற்றும் ஞானிகளுடன் காலம் கழித்து இத்தியான உத்தியைக் கற்றார்.
பௌத்த துறவிகள்கூட இமயமலையில் சுவாமிகள் அறிவு ஞானம் பெறும் பாதையில் குறிப்பிட்டுக் கூறுமளவு தங்கள் பங்களிப்பைச் செய்துள்ளனர். கிருபானந்த சுவாமிகளே இந்த எளிய தியான உத்தியை அனைத்து மனித குலத்துக்;கு இமயத்திலிருந்து திரும்பிச்சென்று கற்பிப்பதற்கான அதிகார உரிமையை வழங்கினார்.
இந்த செயல்துறை வழிகாட்டலானது இந்தியவிலிருந்து அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, ஜேர்மனி, தென்ஆபிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், சிங்கப்பூர், ஐக்கிய அமெரிக்கா, பெரு, மலேசியா, பிரித்தானியா போன்ற நாடுகளைச் சென்றடைந்துள்ளது. (படங்கள்: வருன வன்னியாராச்சி, விஷான்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago