2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

சந்தேகம் என்றால் முறையிடலாம்: நீதிமன்றம்

Editorial   / 2024 ஜூலை 09 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொம்பனிதெருவில் அல்டெயார் அடுக்குமாடி தொடரில், 67 ஆ​ம் மாடியில் இருந்து விழுந்து மரணமடைந்த மாணவன், மாணவியின் மரணம் தொடர்பில் சந்தேகம் இருக்குமாறின், அவைதொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு கோட்டை நீதவான் கோசல சேனாதீர அறிவுறுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் தனிப்பட்ட ரீதியில் முறைப்பாடு செய்யுமாறும் அதற்கான அனுமதியை பெற்றுக்கொள்வதற்காக நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி அசங்க தயாரத்னவுக்கு அறிவுறுத்தினார்.

அல்டெயார் அடுக்குமாடி குடியிருப்பின் 67வது மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவ, மாணவிகளின் மரணம் சந்தேகத்திற்குரியது என மாணவியின் தந்தை கூறியுள்ளதால், தனிப்பட்ட முறைப்பாடு செய்ய அனுமதி வழங்குமாறு சட்டத்தரணி அசங்க தயாரத்ன கோட்டை நீதவான் நீதிமன்றில் திங்கட்கிழமை (08)  கோரிக்கை விடுத்துள்ளார்.  

இரண்டு மாணவர்களின் மரணம் சந்தேகத்திற்குரியது என தனிப்பட்ட முறைப்பாடு செய்ய முடியாது எனவும், இந்த மரணம் சந்தேகத்திற்குரியது என பொலிஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கோட்டை நீதவான் கோசல சேனாதீர தெரிவித்தார்.

கொம்பனிதெரு  பொலிஸார் ஏற்கனவே ‘பி’ அறிக்கை மூலம் உண்மைகளை அறிக்கை செய்திருப்பதால், கோப்பு இலக்கத்தை பெற்று பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறும் நீதவான் கோசல சேனாதீர மேலும் தெரிவித்தார்.

கொம்பனிதெரு பொலிஸார் அண்மையில் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு ‘பி’ அறிக்கை மூலம் உண்மைகளை அறிவித்ததுடன், அலைபேசியில் பொருத்தப்பட்டுள்ள சிம் அட்டைகள் தொடர்பான தொலைபேசி அழைப்பு தரவு பதிவேடுகளை வழங்குமாறு சம்பந்தப்பட்ட தொலைபேசி சேவை நிறுவனங்களுக்கு கோட்டை நீதவான் கோசல சேனாதீர உத்தரவு பிறப்பித்துள்ளார்.

67வது மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவன் மற்றும் மாணவியின் தொலைபேசிகள் கொம்பனிதெரு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன

உயிரிழந்த மாணவனும் மாணவியும் அல்டெயார் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த தமது நண்பர் ஒருவரை சந்திப்பதற்காக சென்றுள்ளதாகவும் அந்த நண்பர் பாகிஸ்தானியர் எனவும் கொம்பனிதெரு பொலிஸார் அப்போது தெரிவித்தனர்.

 மாணவியின் தந்தை பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் இராஜதந்திர சிறப்புரிமை பெற்ற சிரேஷ்ட அதிகாரி ஒருவரின் மகன் என்பதால் மாணவியிடம் வாக்குமூலம் பெறத் தவறியதாக கொம்பனிதெரு பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X