2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

சிறுநீரக நோய்த் தடுப்பு: தேசிய செயலமர்வு

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

ஜனாதிபதி செயலாக்க செயலணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுநீரக நோய்த் தடுப்பு தேசிய செயலமர்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலைமையில் கொழும்பு - 03இல் நேற்று புதன்கிழமை (16) இடம்பெற்றது.

சுகாதார, போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவின் பங்குபற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த சிறுநீரக நோய்த் தடுப்பு தேசிய செயலமர்வு, 'மைத்திரி ஆட்சி நிலையான நாடு' எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றது.

இதில் முக்கியமான கொள்கைப் பிரகடனமாக 'குறிப்பிடப்பட்ட அனைவருக்கும் ஆரோக்கியம் அளிக்கும் நோயற்ற சமூகத்தை உருவாக்குவோம்' என்ற பிரகடன நோக்கு அமைந்திருந்தது. 

சுகாதார பிரதி அமைச்சர் மற்றும் 09 மாகாணங்களைச் சேர்ந்த சுகாதார அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள் உட்பட பலர் இதில் பங்கேற்றிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .