2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

சாரதிக்கு மறியல்

Kogilavani   / 2017 பெப்ரவரி 20 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட்.ஷாஜஹான்

நீர்கொழும்பு -  வேயங்கொடை வீதியின், போலவலான சந்தியில் ஞாயிற்றுக்கிழமை (19) காலை 5.15 மணியளவில் இடம்பெற்ற  வாகன விபத்தில், விமானப் படையின் சிவில் சேவை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய வாக சாரதியை, எதிர்வரும் 23ஆம் திகதி வரை  விளக்கமறியலில் வைகப்குமாறு, நீர்கொழும்பு பதில் நீதவான் கே.ஜி.ஜினதாச உத்தரவிட்டார்.

மத்துகம - வோகன்வத்தையைச் சேர்ந்த 32 வயது நபரே, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வெல்பிஹில்ல கஜநாயக்க என்ற 27 வயதுடைய, இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்விபத்தில் உயிரிழந்தவராவார்.

விபத்தில் பலியான நபர் பயணித்த மோட்டார் சைக்கிள், கருங்கற்களை  ஏற்றிவந்த டிப்பர் வண்டியில் மோதுண்டதிலேயே, விபத்து சம்பவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .