2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

கௌரவிப்பு

Editorial   / 2017 ஜூன் 28 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பீ.எம்.முக்தார்

இந்தியா, மும்பை சிறிவர்தன் ஜாமியா ஹுஸைமியா அல் அராபிய சர்வ கலாசாலையில் முப்திப் பட்டம் பெற்ற, தர்கா நகர் - சென்ரல் வீதியைச் சேர்ந்த முகம்மத் இர்பான் லியாகத் அலியைக் கௌரவிக்கும் நிகழ்வு, தர்கா நகர் மீரா ஜும்ஆ பள்ளிவாசலில், செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்றது.

தர்கா நகர் ஜமியதுல் உலமா சபையின் ஏற்பாட்டில், இத்திஹாத் சபாப் அனுசரணையுடன், நிப்ராஸ் முப்தி தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில், தர்கா நகர் ஜமியதுல் உலமா சபையின் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எச்.எம்.பர்ஹான் (நளீமி) முகம்மத், இர்பான் லியாகத் அலிக்கு நினைவுச் சின்னத்தை வழங்கி வைத்தார்.

தர்கா நகர் ஜமாத் கவுன்ஸில் தலைவர் கலீபதுஷ் ஷாதுலி மௌலவி எஸ்.ஏ.எம். மஸா ஆலிம் (பஹ்ஜி),  பள்ளிவாசல் இமாம் மௌலவி ஹனீபா ஸிராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .