Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2022 ஜூலை 07 , பி.ப. 06:55 - 0 - 231
சனிகிழமை 9ம் திகதியன்று கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி நகர்வது, சுற்றி வளைப்பது, மற்றும் நாடெங்கும் தமது ஊர்களில் தெருக்களுக்கு வந்த அமைதியான முறையில் அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது என எதிர்கட்சிகள், காலிமுக போராளிகள், சிவில் சமூகத்தினர் ஆகியோருக்கு இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் எதிரணி கட்சிகள் சார்பில் கலந்துக்கொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் ஊடகங்களுக்கு கூறியதாவது,
9ம் திகதி சனிக்கிழமை நடைபெற உள்ள முழு அடைப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி முழுமையாக பங்கு பெறும். இதன்படி மலையக தோட்டங்களில் அன்றைய தினம் பணிகளில் ஈடுபடாமல், அமைதியான முறையில் அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும்படி மலையக தோட்ட தொழிலாளர்கள் மற்றும் தோட்ட வதிவாளர்களை தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் கோருகிறோம்.
அதேபோல கொழும்பு உட்பட நகரங்களில் வர்த்தக நிலையங்களையும், அலுவலகங்களையும் மூடி, முழுமையாக அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும்படியும், தமது வேலைத்தள பணியாளர்களையும், அரசு எதிர்ப்பு இயக்கத்தில் கலந்துக்கொள்ள இடமளிக்கும்படியும் அனைத்து தரப்பினரையும் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் கோருகிறோம் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
2 hours ago