Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Freelancer / 2023 ஒக்டோபர் 30 , மு.ப. 11:03 - 0 - 181
இலங்கையில் அதிவிசேட பிரமுகர் ஒருவரை படுகொலைச் செய்த குற்றச்சாட்டில், குற்றவாளியாக இனங்காணப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டு, பூஸ்ஸ சிறையில் அதிபாதுகாப்பு அறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஒருங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் குழுவின் உறுப்பினர் ஒருவரின் மகளுக்கு, கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டலொன்றில் மிகவும் பிரமாண்டமான முறையில் பூப்புனித நீராட்டு விழா நடத்தப்பட்டுள்ளது .
பெருந்தொகை செலவழித்து பிரமாண்டமான முறையில் அந்த உற்சவம் நடத்தப்பட்டுள்ளது என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த உற்சவமும் விருந்துபசாரமும் கடந்த 23ஆம் திகதி இரவு நடத்தப்பட்டுள்ளது என்றும் அறியமுடிகின்றது. மிகவும் விலையுயர்ந்த அழைப்பிதழ் அட்டை மிகவும் அழகாக அச்சிடப்பட்டுள்ளது. உற்சவத்துக்காக 150-200க்கும் உட்பட்டவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர் என்றும் அறியமுடிகின்றது.
உற்சவம் நிறைவடைந்தததும் கொழும்பு, கொம்பனி வீதியில் ஹோட்டலுடன் இருக்கும் முன்னணி வீட்டுத்தொகுதியின் அறையொன்றில் மற்றுமொரு பிரிவினருக்கு அன்றிரவு மீண்டும் விருந்து வைக்கப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
1 hours ago
6 hours ago