Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Kogilavani / 2017 மே 26 , பி.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
களுத்துறை மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்தினால், பெண்ணொருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாகவும் 34 இற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பதுரிலிய பொலிஸ் பிரிவு
களுத்துறை, பதுரிலிய பொலிஸ் பிரிவு, டெல்கிட தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் மூன்று வீடுகள் மண்ணுள் புதையுண்டுள்ளதுடன் இவ்வீடுகளில் வசித்து வந்த 11 பேரில் ஒருவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மண்ணுள் புதையுண்ட 10 பேரில், இருவரின் சடலங்கள் மட்டுமே இதுவரை மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை, கொஸ்குலன பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் மூன்று வீடுகள் சேதமடைந்த போதிலும் எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
புளத்சிங்கள பொலிஸ் பிரிவு
களுத்துறை, புளத்சிங்கள பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பரகொட, கல்கெடிய, மோல்காவ, இஹலவெல்கம, யடகம்பிடிய, தியகடுவ, நாகஹதொள, குகுலேகெல, பாஹியன்கல வீதி, கலவெல்லாவ ஆகிய பிரதேசங்கள், வெள்ளநீரில் மூழ்கியுள்ளதாகவும் இப்பிரதேசங்களில் 10 அடிக்கு வெள்ளநீர் உயர்ந்து காணப்படுதாகவும் புளத்சிங்கள பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், திபோடுவாவ மண்சரிவினால் 3 வீடுகள் மண்ணுள் புதையுண்டுள்ளதுடன் இவ்வீடுகளில் வசித்து வந்த 12 பேர் காணாமல் போயுள்ளனர்.
இதேவேளை, மொரவாக்க மண்சரிவில் சிக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
கொபவக்க, கொபவெலவத்த மண்சரிவினால் 2 வீடுகள் சேதமாகியுள்ளதுடன் இவ்வீடுகளில் வசித்து வந்த 9 பேர் காணாமல் போயுள்ளனர்.
யடகம்பிடிய, நாயதொள, லொக்கேவத்த ஆகிய பகுதிகளில் மண்சரிவினால் 2 வீடுகள் சேதமாகியுள்ளதுடன் இவ்வீடுகளில் வசித்து வந்த மூவர் காணாமல் போயுள்ளனர்.
பொகஹவத்த, மஹகமபுர பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் 4 வீடுகள் சேதமாகியுள்ளதுடன் 10 பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயங்களுடன் மீட்கப்பட்ட ஒருவர், புளத்சிங்கள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை, மீகஸ்தென்ன பொலிஸ் பிரிவு, பெலவத்தை முதல் குமஹதுவ வரையான பகுதி வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாகவும் இப்பகுதியில் வெள்ள நீரானது 4 அடிக்கு உயர்ந்துள்ளதாகவும் மீகஸ்தென்ன பொலிஸார் தெரிவித்தனர். இதனால், இப்பகுதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, களுத்துறை மீகஹத்தென்ன, மதுகம, வெலிப்பன்ன, தினியாவல ஆகிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago