Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 26 , பி.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
என். ஜெயரட்னம்
களுத்துறை மாவட்டத்தில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினைக்கு, நிரந்தர தீர்வொன்றைப் பெற்றுத்தருமாறு வலியுறுத்தி, களுத்துறை நகரில், மக்கள் இன்று (26)பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
"களுத்துறையில் சுத்தமான குடிநீருக்காக அழும் அமைப்பு" இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
களுத்துறை மாவட்டத்தில், வரட்சி நிலவும் காலங்களில், தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையால், களுகங்கையிலிருந்து நீர் பெறப்பட்டு, கெத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம், நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுகிறது.
பேருவளை, வாதுவை, களுத்துறை, தொடம்கொடை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிக்கும் சுமார் 70, 000 குடும்பங்களுக்கு வழங்கப்படும் குழாய் நீரானது, உப்பு தன்மையுடையதால் காணப்படுவதால், மக்கள் குடிநீரைப் பெறுவதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
கடந்த பத்து வருடங்களாக, இவ்வாறான நிலையே காணப்படுவதாக, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, தமது அன்றாடத் தேவைகளுக்காக, சுத்தமான குடிநீரைப் பெற்றுத்தருமாறு, தமது குடிநீர்ப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றை வழங்குமாறும் வலியுறுத்தி, மக்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, களுத்துறை மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் பியல் நிஷாந்த மற்றும் களுத்துறை மாவட்ட செயலாளர் யூ.டீ.சீ ஜயலால் ஆகியோரிடம், தங்களுக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுத் தருமாறு கோரி, பிரதேச மக்கள் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
38 minute ago
2 hours ago
2 hours ago