Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Niroshini / 2016 ஜூலை 02 , மு.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
மௌலவி ஏ.எல்.எம்.கலீலை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உச்சபீடத்தில் மீண்டும் இணைத்து கொள்வதற்கு கட்சியின் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் உச்சபீடத்துக்கு பரிந்துரை செய்துள்ளதாக கட்சியின் செயலாளர் மன்சூர் ஏ காதிர் அறிவித்துள்ளார்.
மௌலவி ஏ.எல்.எம்.கலீலை உச்சபீடத்தின் தொடர்ச்சியான மூன்று கூட்டங்களுக்கு சமூகமளிக்கத் தவறிய காரணத்தினால், மஜ்லிஸ் ஏ சூறா என்ற அமைப்பின் தலைமை பதவியின் மூலம் அவர் உச்சபீடத்துக்கு உறுப்புரிமையை பெற்றிருந்தமை விலக்கிக் கொள்ளப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.
எனினும், மௌலவி ஏ.எல்.எம்.கலீல் அதனை மீள்பரிசீலனை செய்யுமாறு விண்ணப்பித்திருந்ததற்கு அமைவாகவும், பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் சிபாரிசின் அடிப்படையிலும் மேற்படி தீர்மானத்தை தலைவர் ரவூப் ஹக்கீம் மேற்கொண்டுள்ளார்.
அதன்படி, எதிர்வரும் உச்சபீடத்தின் தீர்மானம் மௌலவி ஏ.எல்.எம்.கலீலுக்கு அறிவிக்கப்படும் எனவும் செயலாளர் மன்சூர் ஏ காதிர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உச்சபீடத்தின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த மௌலவி எச்.எம்.எம்.இல்யாஸை மீண்டும் அதற்கு உள்வாங்குவதற்கு தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தீர்மானித்துள்ளார்.
கூட்டுப் பொறுப்பை மீறி நடந்த காரணத்தினால் இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த மௌலவி எச்.எம்.எம்.இல்யாஸின் வேண்டுகோளின் பேரிலும், பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் பேரிலும் தலைவர் ரவூப் ஹக்கீம் இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.
அத்துடன், உலமா காங்கிரஸின் பிரதிநிதி என்ற பதவியை இடைநிறுத்தம் செய்வதாக எடுக்கப்பட்டிருந்த தீர்மானம் நிபந்தனையொன்றின் கீழ் விலக்கிக் கொள்ளப்பட்டிருப்பதாகவும், ஆகையால், மௌலவி எச்.எம்.எம்.இல்யாஸ் உலமா காங்கிரஸ் பிரதிநிதியாக இனிவரும் உச்சபீட கூட்டங்களில் கலந்துகொள்ளவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செயலாளர் மன்சூர் ஏ. காதிர் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago