2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

கம்பஹாவில் மீண்டும் கொரோனா அபாயம்

Freelancer   / 2022 ஜூலை 26 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

திலகரத்ன திஸாநாயக்க

கிரிபத்கொட வைத்தியசாலை ஊழியர்களில் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது கம்பஹா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான ஐந்து பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், பல மாதங்களாக மூடப்பட்டிருந்த கொரோனா வார்டுகளில் சிகிச்சைப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அண்மைய நாட்களில் கம்பஹா மாவட்டத்தில் இரண்டு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் இருந்து கொரோனா பரவும் அபாயம் உள்ளதால், பரிந்துரைக்கப்பட்ட சுகாதாரப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுமாறு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் இந்திக்க வன்னிநாயக்க தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X