Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2015 செப்டெம்பர் 24 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
கரையிலிருந்து 15 அடிக்கு அப்பால் கொள்ளுப்பிட்டிக் கடலில் நீந்தி திரிந்துகொண்டிருந்த போது அவதானிக்கப்பட்ட உவர் நீர் முதலை, புதன்கிழமை (23) மாலை உயிரிழந்து காணப்பட்டதாக வனவலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் பேச்சாளர் ஹஸினி சரத்சந்ர கூறினார்.
இந்த முதலை சுமார் ஒரு வாரத்துக்கும் மேலாக கொள்ளுப்பிட்டிப் பகுதியில் உள்ள கடலில் அவதானிக்கப்பட்டதுடன், இதனைப் பார்வையிடுவதற்காக தினந்தோறும் பொருமளவு பொதுமக்களும் கூடி வந்தனர்.
குறித்த முதலையின் திடீர் மரணத்துக்கான காரணம் அறியப்படவில்லை. ஆனால், அப்பகுதியில் வசித்து வந்த பொதுமக்கள் அதை மீட்பதற்கு மேற்கொண்ட முயற்சி அதன் மரணத்துக்கு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது என ஹஸினி சரத்சந்ர மேலும் கூறினார்.
உலகிலேயே மிகவும் பெரிய ஊரும் விலங்காக இலங்கை உவர் நீர் முதலை அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதுவே சூழல் தொகுதியில் வேட்டையாடும் பிராணிகளில் அதியுச்சத்திலும் உள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago