2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

கைவைத்த யுவதி கைது

Princiya Dixci   / 2016 நவம்பர் 03 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்

நீர்கொழும்பு மற்றும் கட்டுநாயக்க பிரதேசங்களில் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த 17 வயது யுவதியை, நேற்றுப் புதன்கிழமை (03) கைதுசெய்துள்ளதாக கட்டுநாயக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சி.ஐ.பிரியந்த ஏக்கநாயக்க, தெரிவித்தார்.

கல்பிட்டி, கந்தக்குளிப் பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த யுவதி, கட்டுநாயக்க - எவரிவத்தைப் பிரதேசத்திலுள்ள கடையொன்றுக்கு குழந்தையுடன் வந்த பெண்ணின் பணத்தைத் திருட முற்பட்ட போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யுவதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் 55,000 ரூபாய் பெறுமதியுடைய அலைபேசி, 30,000 ரூபாய் பெறுமதியுடைய அலைபேசிகள் 3, பணப்பைகள் 35, அடையாள அட்டைகள் 11 உட்பட, பல்வேறு பொருட்களைக் கட்டுநாயக்க பொலிஸார் மீட்டுள்ளனர்.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்க வலயத்திலுள்ள தொழிற்சாலையொன்றுக்கு கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் சந்தேகநபர் தொழிலுக்கு வந்துள்ளார். இந்நிலையில், தன்னுடன் வேலை செய்யும் சக நண்பிகளுடன், சனிக்கிழமைகளில், நீர்கொழும்பு இரவு நேர சந்தைக்கு வருவதை இவர் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

பின்னர், இரவு நேர சந்தைக்குத் தனித்து வந்து, பெண்களிடம் மாத்திரம், பணம் மற்றும் அலைபேசிகளைத் திருடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த பெண்ணொருவரிடம், சந்தேகநபர், 70 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்டிருப்பதும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .