2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

கொழும்பு- மாலபேவுக்கு மெனோ ரயில் சேவை

Gavitha   / 2016 மே 03 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலிருந்து மாலபேவுக்கான மொனோ ரயில் சேவை திட்டத்துக்கு அனுமதி பெறுவதற்கான பத்திரம், அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சு ஆகியவற்றின் கூட்டு முயற்சியாலேயே இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த இரண்டு அமைச்சாலும் இந்தப் அமைச்சரவை பத்திரத்தில் கையொப்பமிடப்பட்டுள்ளதாகவும் இதற்கான அனுமதி கிடைத்தவுடன், 9 மாத காலப்பகுதிக்குள் இந்தத் திட்டத்தை ஆரம்பித்து 3 வருடத்துக்குள் நிறைவு செய்ய முடியும் என்றும் மாநகர அதிகார சபையின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஜயசேகர தெரிவித்தார்.

கடந்த 100 நாள் அரசாங்கத்தின் போது, இது குறித்தான தீர்மானங்கள் எடுக்கப்பட்ட போதிலும் அது அப்படியே நிறுத்தப்பட்டிருந்ததாகவும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.

அப்போதிருந்த போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, இந்த மொனோரயில் திட்டத்துக்கு அதிகம் செலவு ஏற்படும் என்பதனால், அவர் இலத்திரனியல் புகையிரதத்தை நிறுவுவதற்கே ஆர்வமாக இருந்தார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் தற்போது அதிகரித்துள்ள வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்தத் திட்டம் கொண்டுவரப்படவுள்ளதாகவும் மாலம்பே, தலஹேன, ரொபட் குணவர்தண மாவத்தை, தேசிய வைத்தியசாலை, கொம்பனி வீதி, உலக வர்த்தக நிலையம், புறக்கோட்டை மற்றும் கொட்டாஞ்சேனை வழியாக இந்த ரயில் பயணிப்பதற்கான வரைபு ஏற்கெனவே நிருவப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .