2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

கொழும்பு 07 பஜட் வீதிக்கு கலைஞர் மஹகம சேகரவின் பெயர்

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 08 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு 07 இல் அமைந்திருக்கும் பஜட் வீதிக்கு இலங்கையின் இசைத்துறைக்கு மிகப்பெரும் பங்களிப்பை வழங்கிய கலைஞர் மஹகம சேகரவின் பெயரில் மஹகம சேகர மாவத்தை எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

இந்நிகழ்வு, நேற்று வியாழக்கிழமை (07) பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெற்றது.  

மஹகம சேகர மாவத்தை எனப் பெயரிடப்பட்டுள்ள பெயர்ப் பலகையை ஜனாதிபதியின் அழைப்பிற்கு அமைய பண்டித் அமரதேவ திரைநீக்கம் செய்து வைத்ததோடு, அதற்குரிய வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி மஹகம சேகரவின் மகன் ரவீந்திர மஹகம சேகரவிடம் கையளித்தார். 

பண்டித் அமரதேவவினால் மஹகம சேக்கர பற்றியும் அவர்களது படைப்புகள் பற்றியும் ஒரு சிறு மதிப்பாய்வு முன்வைக்கப்பட்டதோடு, பேராசிரியர் சரத் விஜேசூரியவினால் மஹகம சேகர பற்றிய ஒரு சிறு நினைவுரையும் இடம்பெற்றது. 

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் தம்பர அபிமிலதேரர், சிங்கள அகராதியின் தலைமை ஆசிரியர் அக்குரடியே நன்த தேரர் தலைமையிலான மஹாசங்கத்தினரும் கொழும்பு மாநகர முதல்வர் ஏ.ஜே முஸம்மில், மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய ஆகியோரும் அரசியல்வாதிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் கலைஞர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .