Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Princiya Dixci / 2016 ஜனவரி 14 , மு.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெஹிவளைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட படோவிட்ட கால்வாயிலிருந்து, ஆணின் சடலத்தை, நேற்று புதன்கிழமை (13) காலை கல்கிஸை பொலிஸாரினால் மீட்டுள்ளனர்.
தெஹிவளை, அத்தியடிய பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான ஜெயலத் ஜினின்தர என்ற 57 வயதான வர்த்தகரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என அவரது மனைவி அடையாளம் காட்டியுள்ளார்.
இவர், தனது கணவனைக் காணவில்லையென நேற்று புதன்கிழமை அதிகாலை தெஹிவளை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர், செவ்வாய்க்கிழமை (12) இரவு தனது வர்த்தக நிலையத்தை மூடிவிட்டு வீடு திரும்பும் பொழுது இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டுள்ளார் எனவும் அவரை நகைக்காகவே கடத்திச் சென்று கொலை செய்திருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
குறித்த பாலத்திலிருந்து கொலைசெய்யப்பட்ட வியாபாரியின் காற்சட்டையும், ஒருசோடிக் காலணியும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எவரும் கைதுசெய்யப்படாத நிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடப்பிரிவு தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
23 minute ago
31 minute ago
36 minute ago