2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

கொல்லப்பட இருக்கும் சகோதரியை காப்பாற்றுவோம்: கையெழுத்து வேட்டை

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 08 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்லால் அடித்து  கொல்லுமாறு சவூதி அரேபிய நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்டுள்ள இலங்கைப் பணிப்பெண்ணை விடுவிக்க ஒரு இலட்சம் கையேழுத்தைப் பெறும் நடவடிக்கை, மனித உரிமை ஆர்வலர்களின் ஏற்பாட்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முன்னால் இன்று செவ்வாய்க்கிழமை (08) மற்றும் நேற்று திங்கட்கிழமை (07) முன்னெடுக்கப்பட்டது. 

மனித உரிமை ஆர்வலர்கள் சார்பாக அருட்சகோதரி சக்தி வேல் இங்கு கருத்து தெரிவிக்கையில், 

இப்பணிப்பெண்ணை மீட்க தீர்க்கமான நடவடிக்கை எடுக்குமாறும்  மத்திய கிழக்கு நாடுகளில் சிறைகளிலும் வீட்டு காவல்களிலும், வைத்தியசாலைகளிலும் உள்ள அனைவரைப் பற்றியும் தேடி தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 

மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லத் தயாராகும் அனைவருக்கும் அங்கு செல்வதற்கு முன்னர் அந்நாடு பற்றிய உண்மையான நிலைமைகளையும் சட்டத்தையும் அந்நாட்டின் சமூக, சமய மற்றும் கலாசார நிலைமையை பற்றியும் ஒரு தெளிவான அறிவை வழங்குதல் கட்டாயம்.

அந்நாடுகளின் சட்டமும் ஒழுங்கும் பற்றி சரியானதொரு புரிதல்  இல்லாத காரணமாக இவர்கள் உதவியின்றி தனிமைப்படுத்தப்படுகின்றனர். 

குறிப்பிட்ட நாடுகளின் இலங்கை தூதுவர்களுக்கும் ஏனைய உத்தியோகத்தர்களும் ஆற்ற வேண்டிய பொறுப்புக்களைப் பற்றியும் கடமைகளையும் பற்றியும் உரிய அறிவை வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .