Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Gavitha / 2015 செப்டெம்பர் 13 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இனங்களுக்கிடையே குரோதங்களை ஏற்படுத்த முயலும் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க சர்வமதத் தலைவர்கள் முன்வர வேண்டுமென சர்வமத சமாதான நிதியத்தின் மக்கள் தொடர்பாடல் ஊடக செயலாளர் எஸ்.பி.அந்தோனிமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சகோதர மொழியைச் சேர்ந்த மக்கள், எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தனை பாராட்டியும் வாழ்த்தியும் தமது கிராமங்களில் பதாதைகளைத் தொங்கவிட்டுள்ளனர். ஆனால், ஒருசில அரசியல் தலைவர்கள் மட்டுமே இனத்துவேச கருத்துக்களை தெரிவித்து வருவதுடன் இனங்களுக்கிடையே குரோதங்களை கட்டியெழுப்ப முயற்சிக்கின்றனர்' என்றும் அவர் கூறினார்.
கொழும்பில் சனிக்கிழமை (12) இடம்பெற்ற, சர்வமத சமாதான நிதியத்தின் மாதாந்த கூட்டத்தில் பேசிய போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
'இரத்தினபுரி- கொழும்பு வீதி, மல்கம என்ற இடத்தில் எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தனது படத்துடன் அவரை பாராட்டி வாழ்த்து தெரிவித்து பாரிய பதாகை வைக்கப்பட்டுள்ளது. இந்நாட்டில் வாழும் சாதாரண சிங்கள மக்கள், இனங்களுக்கிடையே சகவாழ்வு சகோதரத்துவத்துடன் வாழ்கின்றனர். வாழ விரும்புகின்றனர். ஆனால் இனதுவேசத்தை கக்கி, சாக்கடை அரசியல் செய்யும் ஒருசில அரசியல்வாதிகளே பிரிவினைக்கும் நல்லினக்கத்துக்கும் பங்கம் விலைவிக்கினறனர்.
இவர்களது இவ்வாறான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு சர்வமத தலைவர்கள் முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
இதன்போது உரையாற்றிய, நீதி-சமத்துவத்துக்கான அமைப்பின் உபதலைவர் அருட் தந்தை ரீட் செல்டன்,
'இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு, வடக்கு-கிழக்கு மாகாணங்களில் நிலவிவரும் காணிப்பிரச்;சினை, யுத்த அகதிகள் மற்றும் அரசியல் கைதிகளது பிரச்சினைகளை மட்டுமின்றி அடுத்து வரப்போகும் வரவு செலவுதிட்டத்தில் அனைத்து தரப்பினருக்கும் திருப்தி அளிக்கும் வகையிலான வரவு செலவு திட்டமாக அமையவும் நாம் நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்றார்.
சர்வமத சமாதான நிதியம் ஆன்மீக ரீதியிலும்-கலந்துரையாடல் மற்றும் உயர்மட்ட பேச்சுவார்ததைகள் மூலமாகவும் பிரிச்சினைகளை தீர்ப்பதற்கு உந்த சக்தியாக திகழ எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கவும் இதன் இணைப்பாளராக செயற்பட எஸ்.பி.அந்தோனிமுத்துவை நியமித்துள்ளது.
சர்வமத சமாதான நிதியத்தின் இணை தலைவர்களான சங்கைக்குரிய கலாநிதி வல்பொல தேரோ(பெலிகொடை), வணபிதா டபிளியு திலகரட்ண (கண்டி) ஆகியோர் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் நாட்டின் அனைத்து பகுதிகளைச்சேர்ந்த சர்வமதத் தலைவர்களும் புத்திஜீவிகளும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago