Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Niroshini / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
2015 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் மிகத் திறமையாக சித்தியடைந்து நாட்டின் முதல் 10 இடங்களைப் பெற்ற 12 மாணவர்கள் இன்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தனர்.
இம்மாணவர்களின் திறமைகளை பாராட்டிய ஜனாதிபதி, மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மாணவர்களுக்கான பணப் பரிசில்களும் ஜனாதிபதியால் வழங்கப்பட்டதுடன், மடி கணினிகளும் பரிசாக வழங்கப்பட்டன.
2015 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் மிகத் திறமையாக சித்தியடைந்து நாட்டில் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட கொழும்பு விசாகா மகளிர் கல்லூரியைச் சேர்ந்த எஸ்.சத்சரணி ஹெட்டியாராச்சி, இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட கொழும்பு நாலந்தா கல்லூரியைச் சேர்ந்த கே.கே.சமல் புன்சர, மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட கொழும்பு தேவி பாலிக்கா வித்தியாலயத்தைச் சேர்ந்த ஆர்.மலீனா ரத்னாயக்க, கண்டி மகா மாயா மகளிர் கல்லூரியைச் சேர்ந்த ஆர்.எம். இந்திவரி உமயங்கா ஆகியோர் உள்ளிட்ட முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் இதில் கலந்துகொண்டனர்.
கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன், கல்வி அமைச்சின் செயலாளர் டப்ளியூ.எம்.பந்துசேன ஆகியோர் உள்ளிட்ட குழுவினரும் இதில் கலந்துகொண்டனர்.
இந்நாட்டின் குறைந்த வயதில் இணையத்தள வடிவமைப்பாளரான கண்டியில் அமைந்துள்ள கொழும்பு சர்வதேச கல்லூரியில் கல்வி பயிலும் வசின்யா பிரேமாநந்த எனும் மாணவி தனது 9வது வயதில் இணையத்தளம் ஒன்றை வடிவமைத்ததுடன், தகவல் தொழில்நுட்பம் தொடர்பான BCS (Bachelor of Computer Science) பட்டத்தை தனது 11வது வயதில் பூர்த்தி செய்துள்ளார். இவர் தனது பெற்றோர்களுடன் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார்.
இம்மாணவியின் திறமைகளை பாராட்டிய ஜனாதிபதி, அவரது வளமான எதிர்காலத்துக்கு வாழ்த்து தெரிவித்து, நினைவுப் பரிசும் வழங்கி வைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
3 hours ago
6 hours ago