2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

குடிநீரை வழங்வதற்கு எதிர்ப்பு

Princiya Dixci   / 2017 மார்ச் 12 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட்.ஷாஜஹான்

நீர்கொழும்பு, போலவலானையில் அமைந்துள்ள பிரதான நீர்த் தாங்கியிலிருந்து கட்டானை பிரதேசத்துக்கு, குடிநீரை வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நீர்கொழும்பைச் சேர்ந்த மக்கள், போலவலானை தேவாலயத்துக்கு முன்பாக, இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், “நீர்கொழும்பு தண்ணீரை திருட வேண்டாம்”, “எங்களது குடிநீர்த் தேவையைக் குறைக்க வேண்டாம்”, “நீர்கொழும்பில் வருங்கால சந்ததிக்கு நீர் வழங்க முடியாமல் போகும்”, “எங்களது தண்ணீரை எங்களுக்குத் தா”, “கட்டானையில் திட்டமிடல் இல்லை; நாங்கள் என்ன செய்வது?”' போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன் கோஷங்களையும் எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்ட இடத்துக்கு வருகை தந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் நீர்கொழும்பு தேர்தல் தொகுதியின் அமைப்பாளரும், மேல் மாகாண சபை உறுப்பினருமான ரொயிஸ் விஜித்த பெர்ணான்டோ, ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .