2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

காடுகளையும் கடலோரங்களையும் பாதுகாக்க முப்படையினரும் தேவை

Gavitha   / 2015 டிசெம்பர் 22 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

காடுகள், கடலோரம் உட்பட இயற்கை வளங்களை பாதுகாப்பதற்காக, எதிர்காலத்தில் முப்படையினரின் உதவியை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

தற்போது நிலவும் சுற்றாடல் பிரச்சினைகள் தொடர்பாக சுற்றாடல் பாதுகாப்பு நிறுவனங்களின் தலைவர்கள், சூழலியலாளர்கள் ஆகியோருடன் இன்று செவ்வாய்க்கிழமை (22), ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போது, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சூழலியலாளர்களுக்கும் நாட்டின் எந்தவொரு நபருக்கும், நாட்டில் எந்த ஒரு இடத்திலும் மேற்கொள்ளப்படும் சுற்றாடல் அழிப்பு தொடர்பாக, உடனடியாக அறிவிக்க முடியுமான குழுவொன்று,  எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் நியமிப்பதற்கு, இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

இந்த குழு, சுற்றாடல் அமைச்சு, வனசீவராசிகள் அமைச்சு மற்றும் இராணுவப்படை ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமையவுள்ளது.

வில்பத்து தேசிய வனவிலங்குகள் பூங்காவில் இடம்பெற்ற காடழிப்பு, ஜனாதிபதியின் தலையீட்டினால் நிறுத்தப்பட்டாலும், அடிக்கடி அங்கு காடழிப்பு இடம்பெறுவதாக, சூழலியலாளர்கள் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தினர்.

மேலும், வடமேல் மாகாண சுற்றாடல் நியதிச்சட்டம் காரணமாக,  வடமேல் மாகாணத்தில் இடம்பெறும் ஒரு சில சூழல் அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு, மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் இயலாமல் உள்ளதாகவும் இங்கு தெளிவுப்படுத்தப்பட்டது.

துறைமுக நகரத் திட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பாகவும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், அதன் எதிர்கால நடவடிக்கை தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளப்படும்போது, அனைத்து ஆய்வு அறிக்கைகளும் ஆழமாக கருத்திற்கொள்ளப்படும் என ஜனாதிபதி, பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .