Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Princiya Dixci / 2016 செப்டெம்பர் 13 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம். இஸட்.ஷாஜஹான்
2 கிலோ 6 கிராம் நிறையுடைய கொக்கேய்ன் போதைப்பொருளை, இலங்கைக்கு கடத்திவந்த பொலிவியா நாட்டுப் பெண்ணொருவரை, எதிர்வரும் 19ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்குமாறு நீர்கொழும்பு மேலதிக நீதவான் கபில துஸ்ஸந்த எபிட்டவல, இன்று செவ்வாய்க்கிழமை (13) உத்தரவிட்டார்.
48 வயதுடைய குறித்த பெண், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த நிலையிலேயே, கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, நேற்றுத் திங்கட்கிழமை (12) சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார்.
சந்தேகநபரான பெண், போதைப்பொருள் விநியோகித்தமை தொடர்பாக தென்னாபிரிக்காவில் 5 வருட காலம் சிறைத் தண்டணை பெற்றுள்ளார் என கட்டுநாயக்க விமான நிலையப் போதைப்பொருள் தடுப்பப் பிரிவின் அதிகாரி தெரிவித்தார்.
அவரது பயணப் பொதியில் சூட்சுமமான முறையில் கொக்கேய்ன் போதைப்பொருளை மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், கிரீஸ் மற்றும் வாசனைத் திரவியத்தைப் பாவித்து போதைப்பொருள் பொதிக்கு கவசம் இடப்பட்டிருந்ததாக அதிகாரி தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago