Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 ஜூலை 10 , பி.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.இஸட்.ஷாஜஹான்
நீர்கொழும்பு தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர், இன்று (10) ஆறு தனியார் பஸ்களை சேவையில் ஈடுபடாமல் தடுத்து வைத்தனர்.
போக்குவரத்து சேவை அனுமதிப்பத்திர விதிகளை மீறி, அனுமதியில்லாத வீதிகளில் சேவையில் ஈடுபட்ட பஸ்களே, இவ்வாறு நீர்கொழும்பு பிரதான பஸ் நிலையத்தில் சேவையில் ஈடுபடவிடாமல் தடுத்து வைக்கப்பட்டன.
இதுதொடர்பாக, நீர்கொழும்பு தனியார் பஸ் சங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,
“கடந்த மாதம் இந்தப் பிரச்சினை தொடர்பாக, மூன்று நாட்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டோம். இதைத்தொடர்ந்து, மேல் மாகாண போக்குவரத்து அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை அடுத்து, போராட்டத்தைக் கைவிட்டோம்,
“ஆயினும், டென்டர் முறைக்கு மாற்றமாக புதிதாக அனுமதி வழங்கப்பட்டுள்ள பஸ்கள், அனுமதிக்கப்பட்ட வீதிகளில் அல்லாமல் அனுமதிக்கப்படாத வீதிகளிலும் பயணிகளை ஏற்றிச் செல்கின்றன.
“நீர்கொழும்பு - மஹரகம, நீர்கொழும்பு - களுத்துறை மற்றும் நீர்கொழும்பு - ஹொரனை ஆகிய வீதிகளில் சேவையில் ஈடுபடும் 6 பஸ்களை, நாங்கள் இன்று சேவையில் ஈடுபடவிடாமல் தடுத்து வைத்துள்ளோம்.
“இந்தப் பிரச்சினையைத் தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், ஆர்ப்பாட்டம் மற்றும் பணிப்பகிஸ்கரிப்பில் மீண்டும் ஈடுபடுவோம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
3 hours ago