2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஊடகவியலாளர் வீடமைப்பு கிராமங்கள்

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 18 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

25 வீடுகளைக் கொண்ட 25 ஊடகவியலாளர் வீடமைப்புக் கிராமங்கள், ஒவ்வொரு மாவட்டங்களிலும் நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்காக ஊடகவியலாளர் ஒவ்வொருவருக்கும் 10 பேர்ச் காணித்துண்டென்று இலவசமாக வழங்கப்பட்டு வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் குறைந்த வட்டியில் வீடமைப்புக்  கடனும் வழங்கப்படும்.

இத்திட்டத்தினை ஊடகத் தகவல்துறை அமைச்சும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சும் இணைந்து செயல்படுத்தவுள்ளது என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். 

வீடமைப்பு அமைச்சில் நேற்று புதன்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாடளாவிய ரீதியில் ஏற்கெனவே 200 எழுச்சிக் கிராமங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. பிரதேச ஊடகவியலாளர்கள் தமக்கென்று ஒரு வீடொன்று இல்லாமல் வாடகை வீடுகளில் கஸ்டங்களை எதிர்நோக்குகின்றனர். 
இந்த வீடமைப்புத் திட்டங்களை ஆரம்பிப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடமைப்பு அமைச்சு காணிகளை அடையாளம் கண்டு காணிகளை இலவசமாக வழங்கும். 

அத்துடன், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் ஏற்கெனவே 2 இலட்சம் ரூபாய் வீடமைப்புக் கடனை குறைந்த வட்டியில் வழங்கி அந்தந்த மாவட்ட வீடமைப்பு அலுவலகங்கள் ஊடாக இந்த வீடமைப்புத் திட்டத்தினை நிர்மாணிக்கும்.

ஊடகவியலாளர்களை தேர்ந்தெடுப்பது சம்பந்தமான பணியை ஊடக தகவல் அமைச்சே நடைமுறைப்படுத்தும். ஊடகவியலாளர்; தமக்கென்று வீடொன்று இல்லாதிருப்பதை உறுதிப்படுத்தல் அவசியம். அத்துடன், தகவல் துறை திணைக்களத்தின் அடையாள அட்டையைப் பெற்றிருத்தல் வேண்டும் என்றார். 

இதன்போது கருத்து தெரிவித்த ஊடக அமைச்சர் ஜயந்த கருணாதிலக்க,

கொழும்பில், ஹோமகவில் வீடமைப்புத்திட்டமொன்றை  நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான காணி அளவீடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அத்திட்டத்தின் நிர்மாணிப்பணிகளை வீடமைப்பு அமைச்சும் ஊடக அமைச்சும் இணைந்து செயற்படுத்தும். பிரதேச ஊடகவியலாளர்களுக்கொன இந்த வீடமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் தகவல்துறை ஊடக அமைச்சர் ஜயந்த கருணாதிலக்க வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் எஸ். பலன்சூரிய, சுயாதீன தொலைக்காட்சித் தலைவர் ஹேமசிரி பெர்ணான்டோ மற்றும் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவி ஜெயவர்த்தன ஆகியோரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .