2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

எதிர்கால வர்த்தக மாவட்டமாக கொழும்பு துறைமுக நகரம் மாறும்

Gavitha   / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்து வரும் தசாப்தங்களுக்குள், கொழும்பு மாவட்டத்தின் வர்த்தக மாவட்டமாக, கொழும்பு துறைமுக நகரம் காணப்படும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன மஹேந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகர சபையின் 150ஆவது நிறைவு தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகரமானது, கொழும்பையும் இலங்கையையும் உலகலாவிய ரீதியில் பெறுமதிமிக்க சங்கிலியாக மாற்றும் என்றும் அவர் இதன்போது கூறியுள்ளார்.

மேலும், 'நாட்டிலுள்ள காணியுரிமை மற்றும் சொத்துரிமை தொடர்பான பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படல் வேண்டும். இலங்கையிலுள்ள சட்டம் கடந்த காலங்களில் தெளிவற்றதாகவும் சேறு படிந்ததாகவும் மாறிவிட்டது. அதனை சீர்திருத்துவதற்கான பணியை துரிதப்படுத்தவேண்டும்' என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான பல பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு, புதிய அரசாங்கம் புதிய சட்டங்களை கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்து வருகின்றது என்று அவர் கூறியுள்ளார்.

வெளிநாட்டவர்களுக்கோ உள்நாட்டவர்களுக்கோ, சொத்துரிமை மற்றும் காணியுரிமை குறித்தான சட்டம் மிகவும் தெளிவானதாக அமைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ள அவர், இப்போது பேசப்பட்ட பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என்று தாம் நம்புவதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .