Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2024 மே 16 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இறந்த ஒருவர் உயிருடன் இருப்பதாக ஆவணம் வழங்கிய கிராம உத்தியோகத்தர் ஒருவர் களுத்துறை பிரிவு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ளவர் தற்போது களுத்துறை தேக்கவத்தை கிராம அதிகாரியின் பகுதியில் கடமையாற்றும் கிராம அதிகாரி என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் வஸ்கடுவ, மில்லகஹந்திய பிரதேசத்தை வசிப்பிடமாகவும், 52 வயதானவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு களுத்துறை பிரதேசத்தில் மற்றுமொரு கிராம உத்தியோகத்தரின் பிரதேசத்தில் கடமையாற்றும் போது உயிரிழந்த பெண் ஒருவரின் பெயரில் முஸ்லிம் மௌலவி ஒருவருக்கு அவர் உயிருடன் இருப்பதாக சந்தேகத்திற்குரிய கிராம உத்தியோகத்தர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு வழங்கப்பட்ட கடிதத்தை பெற்றுக்கொண்ட பெண், களுத்துறை வெட்டுமகட பிரதேசத்தில் வேறு ஒருவருக்கு சொந்தமான காணியின் ஒரு பகுதிக்கு கடிதத்தை சமர்ப்பித்து போலி பத்திரம் தயாரித்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கடிதத்தை வழங்கிய பெண்ணை தனக்கு தெரியாது எனவும், அவர் இரண்டு சிறு குழந்தைகளுடன் வந்து கேட்டதை அடுத்து கடிதம் வழங்கப்பட்டதாகவும் கிராம அதிகாரியின் வாக்குமூலத்தில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். .
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago