2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

இவ்வருடத்துக்குள் வேலைத்திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி

Princiya Dixci   / 2015 நவம்பர் 02 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இவ்வருட இறுதிக்குள் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் கீழ் வரும் சகல வேலைத்திட்டங்களையும் நிறைவடையச் செய்ய வேண்டுமென நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார். 

மேனராகலை நீர் விநியோகத்திட்டத்தின் முதலாம் கட்ட நடவடிக்கைகள் பற்றி ஆராயும் கலந்துரையாடல், அமைச்சின் கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போதே அவர் இதனைக் கேட்டுக்கொண்டுள்ளார். 

ஊவா, சப்ரகமுவ, வட மத்திய, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நீர் வழங்கல் சம்பந்தமான திட்டங்கள் பற்றியும் உன்னிச்சை தமிழ் கிராமங்களுக்கான குடிநீர் விநியோகம் பற்றியும் இங்கு ஆராயப்பட்டன. 

அத்துடன், பெரும்பாலான விடயங்கள் நீர் விநியோக அமைச்சின் கீழ் வருவதனால் அவற்றைத் தொகுத்து உத்தியோகபூர்வ கடிதமொன்றை நீர் விநியோக அமைச்சருக்கு அனுப்பிவைக்குமாறு அமைச்சர் ஹக்கீம் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

நவம்பர் 20ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து வேலைத்திட்டங்களுக்குமான நிதியைப் பெற்றுக்கொடுக்குமாறும் அவர் உயரதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.

இவ்வருட இறுதிக்குள் சகல வேலைத்திட்டங்களையும் நிறைவடையச் செய்ய வேண்டுமெனவும் மிகுதியாகவுள்ள நிதியை தேவையான வேறு இடங்களுக்கு பெற்றுக்கொடுக்க அனைத்து அதிகாரிகளும் முன்வர வேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .