Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 08, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2021 டிசெம்பர் 16 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கடற்பரப்பில் மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலிலிருந்து கொள்கலன்களை அகற்றும் பணி ஆரம்பமாகியுள்ளது.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் உரிமை நிறுவனம், இந்த பணிகளை இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.
“கடலில் மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலிலிருந்து கடற்பரப்பில் சிதறிக் கிடக்கும் கொள்கலன்களை அகற்ற கப்பலின் உரிமையாளரின் நிறுவனம் தற்போது இரண்டு நிறுவனங்களை நியமித்துள்ளது.
அதன்படி, கடலுக்கடியில் சிதறிக் கிடக்கும் கொள்கலன்களை அகற்றும் பணியை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியுள்ளது.
அமெரிக்க நிறுவனம் தற்போதைய நிலையில் இலங்கை கடற்பரப்பில் தமது பணிகளை ஆரம்பித்துள்ளது.
அதே நேரத்தில், ஷாங்காய் சால்வேஜ் நிறுவனத்திற்கு இடிபாடுகளை அகற்றும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இம்மாதம் 19ஆம் திகதிக்குள் எமது கடற்பரப்பிற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது". என தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago