2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

இலங்கை - பாகிஸ்தான் இடையே ஆழமான உறவு: பஞ்சாப் ஆளுநர்

Menaka Mookandi   / 2016 ஏப்ரல் 21 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மற்றும் பாகிஸ்தான் பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதைமிக்க  சிறந்த உறவினை அனுபவித்து வருவதாக பஞ்சாப் ஆளுநர் மாலிக் முஹம்மத் ராபிக் ராஜ்வானா தெரிவித்துள்ளார்.

இலங்கை சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட  இலங்கையின் உயர்மட்ட பௌத்த பிக்குகள், அரசியல்வாதிகள், கல்வியியலாளர்கள்  மற்றும் அதிகாரிகள் ஆகியோருடன் பஞ்சாப் ஆளுனர் இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர்  இவ்வாறு தெரிவித்தார்.

இதன்பொழுது பாகிஸ்தானிய அரசாங்கத்தினால் தமக்கு வழங்கப்பட்ட சிறந்த வரவேற்ப்பு மற்றும் உபசரிப்பிற்கு இலங்கைக் குழுவானது தமது நன்றிகளை தெரிவித்தது.

இலங்கைக் குழுவானது பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் துறைத்தலைவர்கள், பீடாதிபதிகள், மற்றும் பீடத்தின் அங்கத்தவர்களுடன் அல் ராசி இளநிலை பட்டதாரிகள் மண்டபத்திலே சந்திப்பினை நிகழ்த்தியது. துணைவேந்தர் கலாநிதி முஜாஹித் கம்ரன் பல்கலைக்கழகத்தின் பீடங்கள் தொடர்பாக இங்கு விளக்கமளித்தார்.

இச்சந்திப்பில் உரையாற்றுகையில் கௌரவத்திற்குரிய இலங்கை சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்கள் இரு நாடுகளுக்குமிடையிலான பரஸ்பர உறவானது 2500 வருடங்களிற்கு முற்பட்ட கந்தாரா நாகரீகத்தின் பொற்காலத்தில் அடித்தளமிடப்பட்டது எனவும் அதனூடாக இவ் இருதரப்பு உறவு பழங்காலம் தொட்டு நிலவிவருவதாக கூறினார்.

அத்துடன், கடினமான தருணங்களில் குறிப்பாக யுத்த காலப்பகுதியில் பாகிஸ்தானிய அரசாங்கம் இலங்கைக்கு அளித்த  உதவிகளை; ஒருபோதும் மறந்துவிடமுடியாது  என அவர் மேலும் கூறினார்.
பஞ்பாப் பல்கலைகழகத்தில் கல்வி கற்கின்ற  இலங்கை மாணவர்கள் தமது கல்வியினை நிறைவு செய்ததன் பின்னர் இலங்கையில் சேவை செய்வதானது மிக மகிழ்ச்சி தருவதாக அவர் கூறினார்.

இரு நாடுகளும் எவ்விதமான நிபந்தனைகளும், விதிமுறைகளுமின்றி ஒருவருக்கொருவர் உதவிவருவதாக பிரதி உயர்ஸ்தானிகர் சர்ப்ராஸ் அஹமட் காஹன் சிப்ரா தெரிவித்தார். இலங்கையிலுள்ள பாகிஸ்தானிய தூதரகம் பாகிஸ்தானிய கலாச்சாரம், சுற்றுலாத்துறை மற்றும் பௌத்த தலங்கள் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருவதாக அவர் கூறினார். இதன்பொழுது கலாநிதி முஜாஹித் கம்ரன் இலங்கை சபாநாயகருக்கு நினைவு சின்னமொன்றினை வழங்கி வைத்தமை குறிப்பிடதக்கது.

இக்குழு பாகிஸ்தானிய பஞ்சாப்  மாநிலத்தின் மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மையினர் அலுவல்கள் அமைச்சர் திரு. தாஹிர் சிந்து சந்தித்து கலந்துரையாடினர். இந்த உயர்மட்ட பௌத்த பிக்குகள் மற்றும் முன்னனி புலமையாளர்கள் தற்பொழுது பாகிஸ்தானில் காந்தாரா பௌத்த பாரம்பரியத்தினை பார்வையிடுவதற்காக சென்றுள்ளமை குறிப்பிடதக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .