Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 12 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
“இந்து, பௌத்த சமய நல்லிணக்கமும் இராவண பேரரசரும்” எனும் நூல் வெளியீட்டு விழா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று (11), கொழும்பு தேசிய நூதனசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
களனிப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் பட்டப்பின்படிப்பு நிறுவனத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் தனஞ்ஜய கம்லத், களனிப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுக் கற்கைப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் நயோமி கெக்குலாவல ஆகியோரினால் தொகுக்கப்பட்ட இந்நூலானது, மூன்று ஆண்டு கால ஆராய்ச்சியின் வெளிப்பாடாகும்.
சுமார் 160 விகாரைகள், கோவில்களின் தரவுகளை உள்ளடக்கியவாறு தொகுக்கப்பட்டுள்ள இந்நூலின் நான்காவது அத்தியாயத்தில், இராவணன் தொடர்பிலான வரலாற்று ஆராய்ச்சியை இலங்கையில் ஆரம்பித்தது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்து சமய நல்லிணக்கம், சிங்கள சமூகத்தின் தோற்றத்திலிருந்து கி.பி.19 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை இலங்கையில் ஆட்சி செய்த மன்னர்களுக்கும் மக்களுக்குமிடையிலான தொடர்புகளை இந்நூல் விளக்குகின்றது.
நூலாசிரியர்களால் நூலின் முதற்பிரதி, ஜனாதிபதியிடம் வழங்கி வைக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
35 minute ago
1 hours ago
2 hours ago