Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Princiya Dixci / 2017 பெப்ரவரி 22 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுற்றாடலைப் பாதுகாத்து, பொருளாதாரத்தை உயர்த்தி, மின்சாரத்துறையை கட்டியெழுப்பும் எதிர்காலம் தொடர்பாக, இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தினர், ஜனாதிபதி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
எதிர்காலத்தில் மின்னுற்பத்தி நிலையங்களை நிர்மாணிக்கும் இடங்களை திட்டமிடுதல், நீர் மின்சாரத்துக்கு அடுத்ததாகப் பாரிய காற்று மின்னுற்பத்தியை பயன்படுத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பாக, பொறியியலாளர் சங்கம், விரிவான கருத்துக்களை முன்வைத்தது.
இலங்கை மின்சார சபை திட்டமிடும் குறைந்த செலவிலான மின்நிலையங்களுக்கு எதிராக பிற்போக்கு சக்திகளால் விடுக்கப்படும் சவால்கள் தொடர்பாகவும் பொறியியலாளர்கள் சங்கம் கருத்துக்களை முன்வைத்தது.
அத்துடன், மின்சார துறையின் அனுபவங்களுடன் சக்திவலு நிபுணர்களின் கருத்துக்களுக்கு செவிசாய்த்து, எதிர்கால திட்டங்களை அமுல்படுத்த வேண்டிய தேவையை சுட்டிக்காட்டிய பொறியியலாளர்கள், இலங்கை மின்சார சபையின் நீண்ட கால திட்டங்கள் தொடர்பாகவும் விளக்கமளித்தனர்.
மின்சார மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்திவலு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, பிரதியமைச்சர் அஜித் பீ. பெரேரா, அமைச்சின் செயலாளர் கலாநிதி பீ.எம்.எஸ்.பட்டகொட, இலங்கை மின்சார சபையின் தலைவர் டபிள்யூ.டீ.எஸ்.விஜேபால உள்ளிட்டோர் கலந்துரையாடலில் பங்குபற்றினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
2 hours ago
2 hours ago