Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Editorial / 2017 ஜூன் 29 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான இடைக்கால அறிக்கை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில், நேற்று (28) இடம்பெற்ற அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
பிரதமர் அங்கு அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
புதிய அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் பௌத்த மதத்துக்கான முக்கியத்துவம் நீக்கப்படமாட்டாது. ஏனைய மதங்களின் சுதந்திரமும் உறுதிப்படுத்தப்படும். இது தொடர்பாக தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் வெளியிடப்படவுள்ளது.
இது இறுதி அறிக்கை அல்ல. அதன் மூலம் மக்களுக்கு கருத்துத் தெரிவிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும்.
மக்களின் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னர் அரசியலமைப்பை தயாரிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு வழங்கப்படவுள்ளது.
சட்டவாக்கம் மற்றும் நீதித்துறை என்பனவற்றின் அதிகாரங்கள் பற்றியும் கவனம் செலுத்துவது அவசியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கலப்பு தேர்தல் முறை பற்றி சிறு கட்சிகள் இணக்கப்பாட்டை எட்டுவதன் அவசியத்தையும் பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
4 hours ago
5 hours ago