Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Niroshini / 2016 மார்ச் 26 , மு.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
அமெரிக்க கடற்படையின் ஏழாவது கப்பல் படையணியின் கட்டளைக் கப்பலான யு.எஸ்.எஸ் புளு ரிட்ஜ் (எல்.சி.சி 19) கப்பல் இன்று சனிக்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
2011 ஒக்டோபர் மாதத்துக்கு பின்னர் இலங்கை வரும் முதலாவது அமெரிக்க கடற்படை கப்பலாக இதுவாகும்.
கடற்கொள்ளையை எதிர்கொள்ளல், மனிதநேய உதவி வழங்குதல், பிராந்தியத்தின் பிரதானமான கடற்பாதையில் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தல் என்பவற்றுக்கான கடற்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு முயற்சிகளை வலுப்படுத்துவதற்கு இரு நாடுகளும் உறுதிமொழி ஏற்றுக்கொண்ட கடந்த மாதம் வொசிங்டனில் நடைபெற்ற இருநாட்டு பங்காளித்துவ உரையாடலின் தொடர்ச்சியாக இந்த விஜயம் அமைகின்றது.
'சிறந்த நிலைத்திருத்தல் தன்மை, பாதுகாப்பு, செழுமை மற்றும் விதிகள் அடிப்படையிலான ஒழுங்கினை போஷிப்பதற்கு அமெரிக்கா மற்றும் இலங்கை இடையிலான உறுதியான உறவானது உதவி புரியும்' என அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசப் தெரிவித்தார்.
'இலங்கை போன்ற பிராந்திய பங்காளர்களுக்கான அமெரிக்காவின் ஒத்துழைப்பை வெளிப்படுத்துவதாக இந்த அமெரிக்க கடற்படை கப்பலின் விஜயம் அமைந்துள்ளது' என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதன்போது, புளு ரிட்ஜ் கப்பலின் 900 மாலுமிகள், இலங்கையின் கடற்படையினருடன் இணைந்து இலங்கையின் துடிப்பான கலாசாரம் மற்றும் அதுசார்ந்த மக்களுடன் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளவுள்ளனர்.
அத்துடன், சமுதாய நிலையம் ஒன்றின் சுவர்கள் மற்றும் தளபாடங்களை புதுப்பித்தல், விளையாட்டு மைதான உபகரணங்களை அமைத்தல் மற்றும் தேவையுடையோருக்கு உணவு வழங்கல் போன்ற தன்னார்வ செயற்பாடுகளிலும் மாலுமிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த கப்பலில் அமெரிக்க கடற்படையின் இசைக்குழு உறுப்பினர்களும் வருகை தருவதுடன், கொழும்பில் பொது மக்களுக்காக இலவச இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளனர்.
இன்று பிற்பகல் 6 மணி முதல் இரவு 8 மணி வரை விகாரமகாதேவி திறந்தவெளி அரங்கத்தில் இலங்கை கடற்படை, இராணுவம் மற்றும் விமானப்படையுடன் இணைந்து வழங்கும் இசை நிகழ்வும் இதில் உள்ளடங்கும்.
அத்துடன், நாளை நண்பகல் 12 மணிக்கு கொழும்பு மெஜஸ்டிக் சிட்டியிலும், பிற்பகல் 6 மணி முதல் இரவு 7 மணி வரையும் கொழும்பு டச்சு ஹொஸ்பிடல் அருகிலும் பொது மக்களுக்கான இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
14 minute ago
25 minute ago
35 minute ago