2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

அதிபரை இடமாற்றியமைக்கு எதிர்ப்பு

Princiya Dixci   / 2016 மார்ச் 09 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்

சீதுவை தவிசமர மகா வித்தியாலய அதிபரை இடமாற்றம் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள், நேற்று செவ்வாய்க்கிழமை (08) காலை ஆர்ப்பாட்டத்திலும் பேரணியிலும் ஈடுபட்டனர். 

தவிசமர மகா வித்தியாலய அதிபரை, திடீரென இடமாற்றல் செய்தமை அரசியல் பழிவாங்கள் என தெரிவித்தே பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்திலும் பேரணியிலும் ஈடுபட்டனர்.

 சீதுவை மங்சந்தியில் ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்ட பெற்றோர்கள், பின்னர் அங்கிருந்து ஆறு கிலோமீற்றர் தூரத்துக்கு பேரணியாக பயணித்து கொhழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியில் கட்டுநாயக்கா பிரதேசத்தில் அமைந்துள்ள நீர்கொழும்பு வலயக் கல்விக் காரியாலயம் வரை பேரணியாக வந்து, வலயக் கல்விக் காரியாலயம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அதைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களின் பிரதிநிதிகளுக்கும் நீர்கொழும்பு வலயக் கல்விப் பணிப்பாளருக்கும் இடையே பேச்சுவார்ததை நடத்தப்பட்டது.  

தவிசமர மகா வித்தியாலய அதிபருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுககள் உள்ளதாகவும் அதிபருக்க எதிராக ஒழுக்காற்று விசாரணை நடைபெறவுள்ளதாகவும், அவர் அந்தப் பாடசாலையில் தொடர்ந்து பணியாற்றுவது ஒழுக்காற்று விசாரணைக்குத் தடையாக இருப்பதன் காரணமாக தற்காலிகமாக மேல் மாகாண கல்வித் திணைக்களத்துக்கு இணைக்கப்பட்டுள்ளதாகவும் நீர்கொழும்பு வலய கல்விப் பணிப்பாளர் இதன்போது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .