2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

அஞ்சி ஓடிய நபரிடமிருந்து ஹெ​ரோன் பறிமுதல்

Editorial   / 2020 ஓகஸ்ட் 25 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

துசித குமார டீ சில்வா

விசேட அதிரடிப்படையின்  வெலிப்பிட்டிய முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் பாதாகொட-பிங்கேன பிரதேசத்தை நோக்கி பயணித்தபோது, அதிரடிப்படை  வீரர்களைக் கண்டு அஞ்சி ஓடிய நபரொருவரை கைதுசெய்து சோதனைசெய்தபோது  அவரிடமிருந்து 2,000 மில்லி கிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபரை முகா​முக்கு அழைத்துவந்து விசாரணைக்கு உட்படுத்தியபோதே,  அவரது உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மேற்படி போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

பிங்ஹேன பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி நபர் இதற்கு முன்னரும் இவ்வாறு கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X