2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

அக்காவின் இடுப்பால் கடுப்பான அண்ணா

Editorial   / 2024 நவம்பர் 08 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

அன்று செவ்வாய்க்கிழமை,(05) அக்காவும் அலுவலகத்துக்கு வரவில்லை. சார் மட்மே இருந்தார். என்ன செய்வதென்று தெரியவே இல்லை, ஆச்சியும் கொழும்பு வீட்டுக்கு வரவில்லை.

அன்றிரவு தங்குவதற்கு இடமில்லை. எனினும், கொழும்பு வெளியில், சப்ரகமுவ மாகாணத்திலேயே என்னுடைய வீடு இருக்கிறது. சுமார் ஒன்றரை மணிநேர பயணம். வௌ்ளி, சனி, ஞாயிறு ஏன்? திங்களும் விடுமுறை எடுத்துவிட்டதால், செவ்வாய்க்கிழமை (05) அலுவலகத்துக்கு வந்துவிட்டேன்.

சேர், ஆச்சி வீட்டுக்கு வரலசேர், நான், எங்க வீட்டுக்குத்தான் போகனும், என்று மாலை 3.30 மணியளவில் தயங்கி, தயங்கி கேட்டேன். எனினும், என்னுடைய நிலைமையை புரிந்துகொண்ட அவர், என்னுடைய பயணப்பொதியை நோட்டம் விட்டுவிட்டு.

கொழும்பில் ஆச்சி வீட்டுக்கு போவதாயின், உடுப்புகளை கொண்டுவரும் பயணப்பொதி எங்கேயென கேட்டுவிட்டு, திட்டமிட்டே வந்தது தெரியும் எனக்கூறிவிட்டு, சரி,சரி ஓடுஓடு என கூறிவிட்டார்.

சேரை ஏமாற்றிவிடலாம் என நினைத்துக்கொண்ட நான், அடுத்தநாள், புதன்கிழமை (06) உடுப்புகளை எடுத்துக்கொண்டே, அலுவலகத்துக்குச் சென்றுவிட்டேன். எனினும், அன்று மாலையும், சேர், ஆச்சி வர ஏலாதுனு சொல்லிட்டுச்சினு அம்மா சொன்னாங்க, ஆகையால் இன்றைக்கும் வீட்டுக்கு போகவேண்டும் என்று மெதுவாக கூறினேன்.

உங்கள் நாடகம் எல்லாமே ​எனக்குத் தெரியும் எனக்கூறிய சேர், ஓடுஓடு என்று அனுமதியை வழங்கிவிட்டார்.

கதை அதுவல்ல, செவ்வாய்க்கிழமை (05) மாலை 4 மணியளவில் அலுவலகத்தை விட்டு கிளம்பிய நான், கொழும்பு புறக்கோட்டை பஸ் நிலையத்துக்குச் சென்று, அவிசாவளையை கடந்து ​குளிரான பிரதேசத்துக்கு பயணிக்கும் பஸ்ஸில் ஏறிக்கொண்டேன்.

அந்த பஸ்ஸில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. தூர பிரதேசத்துக்குச் செல்லும் பஸ் என்பதால், பயணிகள் வரும் வரையில் காத்திருந்தனர். சுமார் 1 மணிநேரத்துக்கு பின்னர், மாலை 5.45 மணியவிலேயே பஸ் புறப்பட்டது.

அந்த பஸ்ஸில், சாரதியின் பக்கத்தில் மூன்று ஆசனங்களை கொண்ட இருக்கைகளும், கதவுகள், பக்கத்தில் இரண்டு ஆசனங்களைக் கொண்ட இருக்கைகளும் இருந்தன.

மூன்றாவது வரிசையில், மூன்று ஆசனங்களைக் கொண்ட இருக்கையில் நான் அமர்ந்துகொண்டேன், அப்போதுதான், இடையில் இறங்குவதற்கு இலகு. எனக்கு பக்கத்தில், இரண்டு பெண்கள் அமர்ந்துகொண்டனர். நான், அலைபேசியை பார்த்துக்கொண்டே போனேன். சேரை எப்படியோ ஏமாற்றிவிட்டேன் என்ற சந்தோசம் ஒருபுரம் சிரிப்பை ஏற்படுத்தியது.

கொஞ்சம் மழை பெய்ததால் கூதலும் அடித்தது. அதற்கிடையில், நின்றுகொண்டு பயணிக்கும் அளவுக்கு பயணிகள் நிரம்பிவிட்டனர்.

சாரதிக்கு பின்பக்கமாக உள்ள, மூன்று ஆசனங்களைக் கொண்ட இருக்கையில், பயணிகள் நிற்கும் ஓரத்தில், பெண்ணொருவர் அமர்ந்திருந்தார். ஏனைய இருவரும் ஆண் பயணிகள்.

அந்த வரிசையில், இரண்டு ஆசனங்களைக் கொண்ட இருக்கையில், இரண்டு ஆண்கள் அமர்ந்திருந்தனர்.

பஸ் பல கிலோமீற்றர் தூரம் பயணித்ததன் பின்னர்,   பலரும் அயர்ந்து தூங்கிவிட்டனர். நின்று பயணிக்கும் பணிக்கும் பயணிகள் தூங்குவது குறைவே.

இரண்டு இருக்கைகளில் யன்னல் ஓரத்தில் அல்ல, மறுபுர ஓரத்தில் அமர்ந்து பயணித்தவர், அக்காவின் இடுப்பை வருடிவிட்டார். சற்று எதிர்பாராத அக்கா சத்தமிட்டு, கூச்சலிட்டார். இதனால், ஆத்திரமடைந்த அண்ணா, அந்த நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், அயர்ந்திருந்த பயணிகள் அனைவரும் விழித்துக்கொண்டனர்.

பொது போக்குவரத்தில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள், இன்னும் குறைவில்லை என்பதை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது. மறுநாளான வியாழக்கிழமையும் (07) விடுமுறை எடுப்பதற்காக, சேரிடம் கெஞ்சிய போது, கவனமாக போய்வாருங்கள் என அறிவுரை கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X