Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Princiya Dixci / 2017 ஏப்ரல் 04 , மு.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.இஸட்.ஷாஜஹான்
தீர்வைக் கட்டணம் (TAX) செலுத்தாமல் ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உதிரிப் பாகங்களைப் பொருத்தித் தயாரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மூன்றைக் கைப்பற்றியுள்ளதாகவும் சந்தேகத்தின் பேரில் நபரொருவரையும் நேற்றுக் கைதுசெய்துள்ளதாக, நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.
ஆண்டி அம்பலம பிரதேசத்தைச் சேர்ந்த சிங்கள பேலிகே சரித் லக்ஷான் (வயது 26) என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவராவார்.
இதுதொடர்பாக பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,
மோட்டார் சைக்கிள்களை உதிரிப்பாகங்களாகப் பிரித்து ஜப்பானிலிருந்து நாட்டுக்குள் தீர்வைக் கட்டணம் செலுத்தாமல் கொண்டு வந்து, மீளவும் அவற்றைப் பொருத்தி விற்பனை செய்யும் சட்டவிரோத செயல்பாடு தொடர்பாக தகவலொன்று கிடைத்தது.
இதனையடுத்து ஆண்டி அம்பலம பிரதேசத்தில் வீடொன்றில் வைத்து குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார். அந்த வீட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 250 சிசி (குதிரை வழு கொண்ட) 3 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த மோட்டார் சைக்கிள்களைத் தீர்வைக் கட்டணம் செலுத்தப்பட்ட பின்னர் விற்பனை செய்வதாக இருந்தால் ஒரு சைக்கிளின் பெறுமதி 12 இலட்சம் ரூபாயாகும். ஜப்பானிலிருந்து மோட்டார் சைக்கிள்களை உதிரிப்பாகங்களாகப் பிரித்து நாட்டுக்குள் கொண்டு வந்து, அவற்றை கொழும்பில் வைத்துப் பொருத்தி, போலி ஆவணங்களைத் தயார் செய்து விற்பனை செய்துள்ளனர்.
ஆவணங்கள் தயாரிக்கப்பட்ட மோட்டார்சைக்கிள், 12 இலட்சம் ரூபாய்க்கும் ஆவணம் இல்லாத நிலையில் 5 முதல் ஐந்தரை இலட்சம் ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர், கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, மினுவாங்கொடை நீதிமன்றில் இன்று (4) ஆஜர்செய்யப்படவுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
6 hours ago