Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Editorial / 2017 ஜூலை 11 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
துஷித குமார டி சில்வா
வெலிப்பென்ன, வலகெதர மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களில் 45 பேர், இன்று (11) திடீர் சுகயீனமடைந்த நிலையில், தர்கா நகரத்தில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று, அந்த வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியான டொக்டர் ஜீ.ஏ.வை.ஏ.கயான் விஜேசேகர தெரிவித்தார்.
அந்தப் பாடசாலையில் 6ஆம், 7ஆம் மற்றும் 8ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களில் 45 பேரே இவ்வாறு, திடீரென சுகயீனமடைந்துள்ளனர்.
மாணவர்களின் உடலில் ஆங்காங்கே அரிப்பு ஏற்பட்டுள்ளது. அதனையடுத்தே அவர்கள், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 11 பேர், தங்கியிருந்து சிகிச்சைப்பெற்று வருகின்றனர் என்றும் வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
இந்த சகயீனம் ஏற்படுவதற்கான காரணம் என்ன என்று அறிவதற்கு, பொதுச் சுகாதாரப் பரிசோதனைக் குழுவொன்று அந்த பாடசாலையில், மேற்குறிப்பிட்ட வகுப்புகளின் வகுப்பறைகளைச் சோதனைக்கு உட்படுத்தியுள்ளது.
இதேவேளை, கடந்த 7ஆம் திகதியன்றும், சில மாணவர்களின் முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில், சிவப்பு நிறத்திலான கொப்புழங்கள் ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் என்றும், வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்கள் திடீர் சுகயீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைக் கேள்வியுற்ற பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பலரும் வைத்தியசாலைக்குப் படையெடுத்திருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
7 hours ago