2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

ரூ.8 இலட்சம் பெறுமதியான மதுபானம் மீட்பு: ஒருவர் கைது

Thipaan   / 2015 ஓகஸ்ட் 22 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்

மினுவாங்கொட, கட்டுவெல்லேகம பிரதேசத்தில் வீடொன்றில் இயங்கி வந்த சட்டவிரோத மதுபான தயாரிப்பு நிலையம் ஒன்றை சுற்றிவளைத்து எட்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத மதுபானங்களையும் உபகரணங்களையும் மீட்டுள்ளதாகவும் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் நீர்கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று வெள்ளிக்கிழமை (21) இடம்பெற்ற சுற்றிவளைப்பில், மினுவாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய  திருமணமான நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளவராவார.;

குறித்த வீட்டில் குழிகள் தோண்டி பரல்களில் மதுபானம் புதைக்கப்பட்டிருந்ததாகவும் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .