Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 20 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையினான கலந்துரையாடலொன்று, ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை (20) இடம்பெற்றது.
புதிய நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதற்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இச்சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
நாட்டின் தற்போதைய தேவைகளை அறிந்து நாட்டுக்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினால் செய்ய முடியுமான பொறுப்புக்கள் குறித்து இங்கு தெளிவுபடுத்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியாக இருந்து எடுக்கப்படும் சகல தீர்மானங்களும் நாட்டினதும் மக்களினதும் வெற்றியை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டுமெனத் தெரிவித்தார்.
தேசிய மற்றும் சர்வதேச விவகாரங்களிலும் நாட்டுக்கு ஏற்பட முடியுமான ஏனைய சவால்களின்போதும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சரியான அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்த ஜனாதிபதி, உடன்பாட்டுடன் செயற்படுவதனால் மட்டுமே நாட்டு மக்களை வெற்றிப் பாதைக்கு கொண்டு வரமுடியும் எனவும் குறிப்பிட்டார். ஓர் அரசாங்கம் என்ற வகையில் ஒன்றுபட்டு செயற்படுவதே அதற்கு பொருத்தமான வழிமுறையாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
ஒரு திறந்த கலந்துரையாடலாக நடைபெற்ற இச்சந்திப்பில் தேசிய அரசாங்கமாக எதிர்காலத்தில் செயற்படுவது தொடர்பாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கருத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் விரிவாகக் கலந்துரையாடி தமக்கு ஒரு அறிக்கையை வழங்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
இதற்காக ஜோன் செனவிரத்னவின் தலைமையில் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவை செயலாளராகக் கொண்டு ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் புதிதாக நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago