Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2015 ஓகஸ்ட் 14 , மு.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிருஷ்ண பக்திக்கழக ஸ்தாபகரும் ஆன்மீகக் குருவுமான பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதா, இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட தினத்தின் 50 ஆண்டுகள் நிறைவு தினத்தை எதிர்வரும் 19 ஆம் திகதியை வெகு விமரிசையாகக் கொண்டாட மேற்படி கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
அன்றைய தினம் கொட்டாஞ்சேனை ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ண ஆலயத்தில் பல விஷேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கலியுக துன்பங்களில் இருந்து விடுபட ஒரே மார்க்கமென வேத சாஸ்திரங்கள் கூறும் ஹரி நாம சங்கீர்த்தனத்தை உலகெங்கும் எடுத்துச் சென்று மனித இனத்தின் நன்மைக்காக நடைமுறைப்படுத்தியவர் அருட்திரு ஸ்ரீல பிரபுபாதா. அதன் அடையாளமாக இம்மாதம் 19ஆம் திகதியன்று காலை 6.00 மணிக்கு கொட்டாஞ்சேனை ஸ்ரீஸ்ரீ ராதா கிருஷ்ண ஆலயத்திலிருந்து நகர சங்கீர்த்தனமும் அதைத் தொடர்ந்து காலை 8.00 மணிக்கு தர்சன ஆராத்தி, குருபூஜை என்பனவும், குருவின் முக்கியத்துவம் பற்றிய பிரசங்கமும் இடம்பெறவுள்ளது.
ஸ்ரீஸ்ரீ பிரபுபாதா நமக்களித்த செல்வங்களும் அவற்றின் சிறப்புக்களும் பற்றிய விமர்சனங்கள் நாம சங்கீர்த்தனம் என்பன இடம்பெற்று அடியார்களுக்கு பகவத் பிரசாதம் வழங்கப்படவுள்ளது.
அதேதினம் மாலை 6.00 மணிக்கு வெள்ளவத்தை இராம கிருஷ்ண மிஷன் மண்டபத்தில் ஸ்ரீல பிரபுபாதா ஞாபகார்த்த முத்திரை வெளியீடு இடம்பெறும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago