2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

வாகன விபத்தில் சாரதி பலி

Menaka Mookandi   / 2015 ஜூன் 17 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கந்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிவுலப்பிட்டி பிரதேசத்தில் விமான நிலைய போக்குவரத்து பாதையில் வைத்து 65ஆவது இராணுவ படைப்பிரிவுக்கு சொந்தமான டிப்பர் வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தானது நேற்று செவ்வாய்கிழமை (16) மாலை 4 மணியளவில் நிகழ்ந்துள்ளது. கிம்புலாபிட்டிய சந்தியிலிருந்து ஆடியம்பலம நோக்கி பயணித்த டிப்பர் வண்டியுடன் பின்னால் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதியமையே விபத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

படுகாயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிள் சாரதி நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் கிம்புலாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடைய சூரிய முதியன்சேலாகே விஜேதுங்க என்பவரே ஆவார். சடலம் பிரேத பரிசோதனையின் பொருட்டு நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த டிப்பர் வண்டியின் சாரதி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .