2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

தாருல் புர்கான் அல்-கரீம் கல்லூரியின் பட்டமளிப்பு விழா

Thipaan   / 2015 ஜூன் 08 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு தாருல் புர்கான் அல்-கரீம் கல்லூரியின் 'அல்-ஹாபிழ்' பட்டம் வழங்கும் முதலாவது பட்டமளிப்பு விழா-  2015  நிகழ்வு  கல்லூரியின் வளாகத்தில் சனிக்கிழமை (06) நடைபெற்றது.

இஹ்ஸானிய்யா அரபுக் கல்லூரியின் உப அதிபரும் தாருல் புர்கான் அல்-கரீம் கல்லூரியின் தலைவருமான அஷ்ஷேக் எம்.எப்.எம் பரூட் (இஹ்ஸானி) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக இஹ்ஸானிய்யா அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷேக் எம்.ஐ.எம் ஹூசைன் (தீனி,பாரி) கலந்து கொண்டார்.

தாருல் புர்கான் அல்-கரீம் கல்லூரியின் பொது ஆலோசகர் அஷ்ஷேக் ஹஸன் பரீட் (பின்னூரி)  பிரதம பேச்சாளராக கலந்துகொண்டு உரையாற்றினார்.

அகில இலங்கை ஐம்மியதுல் உலமா சபை நீர்கொழும்பு கிளைத் தலைவர் அஷ்ஷேக்  (டீனி) சிறப்பு உரையாற்றினார்.

இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக கலந்துகொண்ட முன்னாள் நம்பிக்கையார் சபை தலைவர் அல் ஹாஜ் எம்.எஸ்.எம் அன்வர், தற்போதைய நம்பிக்கையார் சபை தலைவர் அல் ஹாஜ் எம்.ஏ.எம் ரமீஸ் மற்றும் நீர்கொழும்பு அல் ஹிலால் மத்திய கல்லூரி பிரதி அதிபர் அல் ஹாஜ் எம்.ஆர்.எம் அலாவுடீன் ஆகியோருக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கப்பட்டன.

அல்-ஹாபிழ் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்ட இஹ்ஸானிய்யா அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷேக் எம்.ஐ.எம் ஹூசைன் (தீனி,பாரி)  சான்றிதழ்களை வழங்கிவைத்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .