2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

ஸ்ரீ லங்கன் விமானம் திடீர் தரையிறக்கம்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 09 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் விமானச் சேவைக்கு வழங்கப்பட்ட ஸ்ரீ லங்கன் விமானம் ஒன்று, பிரித்தானிய விமானப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானச் சேவையைச் சேர்ந்த ஊழியர்களுடன், குத்தகை ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்ட விமானமே, இவ்வாறு பிரித்தானிய விமான படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்போது, குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்துக் கொண்ட 52 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

PK - 757 விமான எண்ணின் கீழ், பாகிஸ்தான் பிரீமியர் சேவைக்காக பயன்படுத்தப்பட்ட ஸ்ரீ லங்கன் விமானச் சேவைக்கான 330 ஏ எயார் பஸ் விமானம், ஊழியர்களுடனுடன் 150 பயணிகளுடனும், லாகூரில் இருந்து பிரித்தானியாவின் ஹீதர் விமான நிலையம் நோக்கி, புதன்கிழமை பயணித்துக்கொண்டிருந்தது.

இந்த விமானம், பிரித்தானியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதென, பிரித்தானிய விமானப்படையினருக்கு அநாமதேய அழைப்பொன்று கிடைக்கப்பெற்றுள்ளது.  

இதனையடுத்து, பிரித்தானிய விமான எல்லைப்பகுதியில் வைத்து, அந்நாட்டு விமானப் படைக்குச் சொந்தமான இரண்டு போர் விமானங்கள், அந்த விமானத்தைப் பின்தொடர்ந்து, கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. இதனையடுத்து, பிரித்தானியாவின் ஸ்டேம் விமான நிலையத்தில், அந்த விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, விமானத்துக்குள் சென்று, திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட பிரித்தானிய பாதுகாப்பு பிரிவினர், அங்கு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்துக்கொண்ட 52 வயதுடைய ஒருவரைக் கைது செய்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .