Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Princiya Dixci / 2017 ஏப்ரல் 26 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகாவலி வலயங்களைச் சேர்ந்த சிறுவர்களின் கலை, கலாசார திறமைகளை வெளிக்கொணரும் ‘மகாவலி பிரதிபா’ கலாசார விழா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில், நாளை (27) பிற்பகல் 6 மணிக்கு நடைபெறவுள்ளது.
இலங்கையில் பாரிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமான மகாவலி அபிவிருத்தி திட்டம் 10 வலயங்களைக் கொண்டு, நாட்டின் 40 சதவீதப் பிரதேசத்தை உள்ளடக்கியுள்ளது.
மகாவலி கிராமங்களிலுள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் சிறுவர்களின் கலை மற்றும் கலாசார திறமைகளை மேம்படுத்தும் நோக்குடன், ஜனாதிபதியின் எண்ணக்கருவின் பிரகாரம், மகாவலி கலாசார செயலணி மற்றும் மகாவலி நிலையம் இணைந்து இவ்விழாவை ஏற்பாடு செய்துள்ளன.
மகாவலி கிராமங்களிலுள்ள பிள்ளைகளின் கலைத் திறமைகளை இனங்காணுதல், கலைத் திறன்களை மேம்படுத்த வழிகாட்டுதல் இலங்கையில் தனித்துவத்தைப் பாதுகாப்பதற்காக கலாசார அம்சங்களைப் பிரபல்யப்படுத்த நடவடிக்கை எடுத்தல், மகாவலி வலய பிள்ளைகளுக்கு தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் தமது திறமைகளை வெளிக்காட்டக்கூடிய தளத்தை உருவாக்கிக்கொடுத்தல் ஆகியவை இந்நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும்.
மகாவலி வலயங்களைச் சேர்ந்த 850 பிள்ளைகளின் பங்குபற்றுதலுடன், நடைபெறும் இந்த மகாவலி பிரதிபா கலை விழாவில் இசை, நாடகம், நடனம் மட்டுமன்றி பேச்சு, சித்திரம், இசையமைப்பு குறு நாடகம் போன்ற பல்வேறு போட்டிகளும் இடம்பெறவுள்ளன.
‘எதிர்கால மகாவலி’ என்ற கருப்பொருளின் கீழ், இந்த அனைத்து கலை மற்றும் கலாசார படைப்புகளும் ஒழுங்குபடுத்தப்பட்டிருப்பது விசேட அம்சமாகும் என்பதுடன், மகாவலி சிறுவர்களை கலை மற்றும் கலாசார அம்சங்களில் தொடர்ச்சியாக ஈடுபடுத்துவதற்கும் மகாவலி வலயங்களில் குடியிருக்கும் விவசாய சமூகத்தின் களைப்புற்ற கண்களுக்கும் உள்ளத்திற்கும் ஆறுதலை வழங்கவும் இதன்மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago