Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Niroshini / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
“இலங்கை வானொலி முஸ்லிம் சேவைக்கு பணிப்பாளர் ஒருவரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன். அதற்கான தீர்வைப் பெற்றுத் தருவேன்” என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல், அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளர் எம்.இஸட். அஹ்மத் முனவ்வரின் 'இலங்கை வானொலி முஸ்லிம் சேவை' என்ற நூல் வெளியீட்டு விழா, கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
“இலங்கை வானொலியிலே முஸ்லிம் பிரிவு காப்பாற்றப்பட வேண்டும். தொடர்ந்து வலுவாக்கப்பட வேண்டும். முஸ்லிம் பிரிவின் பணிப்பாளர் பதவி இன்னும் நிரந்தரம் செய்யப்படவில்லை. பதில் பணிப்பாளர் பதவி தான் இருக்கின்றது. இது பற்றி முஜிபுர் ரஹ்மானிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அது என் மனதில் பதிந்து விட்டது. நிச்சயமாக நான் அதற்கு நடவடிக்கை எடுத்து தீர்வைப் பெற்றுக் கொடுப்பேன்.
ஏனென்றால் எமது நாடு ஒரு காலத்தில் ஒரே இனத்துக்கு ஒரே மதத்துக்கு ஒரே மொழிக்கு மாத்திரம் சொந்தமான நாடாக காட்டப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த தோற்றப்பாட்டை ஜனநாயக ரீதியாக நாங்கள் அழித்து ஒழித்திருக்கின்றோம். நாங்கள் எல்லோரும் சேர்ந்து அழித்து ஒழித்திருக்கின்றோம். அது உண்மை. இன்று ஒரே நாடு உண்மை. ஒரே நாடு என்றால் ஒரே மொழி அல்ல. மாறாக, மூன்று மொழிகள் இருக்கின்றன.
அது மட்டுமல்ல, எனது சகவாழ்வு அமைச்சிலே 21 இனங்கள் பதிவு செயப்பட்டிருக்கின்றன. பொதுவாகப் பேசும் போது நாங்கள் பிரதான இனங்களைப் பேசுகின்றோம். எமது பிரதான 3 இனங்கள் போக மேலதிகமாக 18 இனங்கள் எமது நாட்டில் வாழ்கின்றன.
அப்படி இருக்கின்றபோது, பல இனங்கள் பல மொழிகள் பல மதங்கள் வாழுகின்ற நாடு என்று சொல்லும் பொழுது எல்லா மொழிகளுக்கும் எல்லா மதங்களுக்கும் எல்லா இனங்களுக்கும் உரிய அங்கிகாரம் வழங்கப்பட வேண்டும்.
ஆகவே, சகோதரர்களை அரவணைக்கின்ற பாங்கு இருந்தால்தான் அது உண்மையான பன்மைத்தன்மையை தொடர்ந்து கட்டிக்காக்க முடியும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago